யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு மகாராஜா அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரவாகு, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், வெள்ளவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலினிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) பாசமிகு கணவரும்,
ராஜினி(பிரித்தானியா), ஸ்ரீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமாரன்(பிரித்தானியா), வனித்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, மகேஸ்வரி, தனலக்ஷ்மி, கனகராஜா, துரைராஜா, தனஸ்வரி, சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவதாசன், குருதாசன் மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானுஜன், வராகி, அபிலாஷ், சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பி.ப 04:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 09-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.