
அமரர் வீரவாகு ஆறுமுகம்
(தாஸ் மாஸ்டர்)
ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி, உரும்பிராய் சைவத்தமிழ், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 95
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veeravagu Arumugam
1925 -
2020

அன்பின் ஆசையா, எங்களை ஆசையோடும் ஆசிரியர் போன்று அதிகாரத்துடனும் வழி நடத்திய உங்களை என்றும் நினைத்திருப்போம். நீங்கள் தமிழோடு விளையாடி எங்களை மகிழ்விக்கும் காலங்கள் எமது மனதில் நிறைந்துள்ளன. எங்களின் பெயர்களுக்கும் ஊர்களுக்கும் மறு பெயர் சூட்டி எங்களை சிரிக்க வைப்பீர்கள். வாழ்க்கையில் தத்துவத்தை சைவ நன் நெறி கூறி உணர்த்துவார்கள் வீர்கள். எமது பெற்றோரும் நாங்களும் உங்களை ஆசையா என்று அன்புடன் அழைப்பதற்கு காரணம் உண்டு. உரிமையோடு எங்களை நீங்களும் ஆசம்மாவும் அரவணைத்துக் கொள்வீர்கள். படிக்கும் நேரமென்றால் கட்டுப்பாட்டில் வைத்து இருத்து வீர்கள். மறு நேரங்களில் குறும்பாக பேசுவீர்கள். நீங்கள் மறக்கமுடியாத அன்பான ஒரு மனிதர். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
Write Tribute