15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வீரசிங்கம் தனபாலசிங்கம்
(மணியம்)
இறப்பு
- 31 AUG 2010
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் தனபாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!
பூந்தோட்டத்தில் நல் மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Om shanthy