யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு, London Southall, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் இராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
ஆறமுடியவில்லை எம்மால்..!
எங்கள் அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்!
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்!
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்!
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
நீங்களே எம் அப்பாவாக வரனும் என்று
தினம் இறை துதி பாடும் பிள்ளைகள்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
We are deeply saddened by the loss of Periyappa. Please accept our heartfelt condolences to your family. Our prayers and thoughts are with you.