சித்தப்பா நீரே எங்கள் சொத்தப்பா
அவசரமாய் சென்றதேனோ
கலங்குகிறோம் நாங்களெல்லாம்.
அழகான உங்கள் புன்னகையும் கனிவான வார்த்தைகளும் இனி நாம்
எங்கு காண்போம் எப்ப கேற்ப்போம்.
ஏணியாய் நின்று உயர்த்தி விட்டீரே
இன்று நீங்கள் உயரப் பறந்து சென்றதேனோ.
அன்பெனும் உங்கள் கோவிலில்
பாசமுள்ள பக்தர்கள் நாம்
நேசக்கரம் நீட்டியவரே,
காலன் உம்மை பாசக்கயிறு கொண்டு இழுத்தானோ.
வாடுகிறோம் நாங்களெல்லாம்
ஓடுகிறோம் உம் நினைவுகளைத் தேடி
மீளாத் துயில் சென்றீரோ
ஆறாத் துயரில் எம்மை வாடவிட்டு.
நீங்கா நினைவுகளாக எந்நாளும் வீற்றிருப்பீர்
எம் மனங்களிலெல்லாம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
We are honored and blessed to have known this beautiful soul. Our condolences.