யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் உரும்பிராய், இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு ஆறுமுகம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அவரின் ஆத்ம சாந்தி அடையும் வண்ணம் பிரார்த்தித்து கனடா சைவத்தமிழ் சங்கம் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கின்றது.
புன்னகையும் இன் சொல்லும் போற்றும் இயல்புடைய நன்மை மிகு ஆறுமுகம் ஆசிரியரே நின்னிய செந்தமிழின் பற்றினையும் தேன் சைவப்பற்றினையும் வந்தனை செய்வோமே ஐயந்து.
தெய்வ பக்தியும் தெளிந்த ஞானமும் நெறியினை உய்யும் நெறியினை உரைக்கும் ஆற்றலும் கற்றவாறே நிற்கும் சிறப்புமும் பெற்ற ஆறுமுகம் எனும் ஆசிரியதிலகமே! நல்லாசானாய் மாணவர்கள் வியப்ப ஆண்டு பல நீங்கள் ஆற்றிய அரும் பணியை போற்றிப் பலரும் இன்றும் நினைவு கூறுவார்கள், இலக்கிய, கம்பராமாயணப் பாடல்களை சுவைபட கற்பித்த தமிழ் பேராசான் உங்களுக்கு நிகர் யாருமில்லை அப்படியான ஆசிரியர் ஆறுமுகம் ஐயாவே நீங்கள் ஆயிரம் பிறை கண்டு தொன்நூற்று ஐந்து அகவையில் சிவகதி அடைந்து விட்டிர்கள் உங்கள் ஆத்ம சாந்தியடையும் வண்ணமும் உங்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!