
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரலட்சுமி செல்வநாதன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாதன்(முன்னாள் ராணிஸ்டோர் உரிமையாளர்- செட்டிக்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரி(ராணி), ஜெகதீஸ்வரி(றஞ்சி), கேதீஸ்வரன்(தவம்), கோணேஸ்வரி(செல்வி), கனகேஸ்வரன்(வரதன்), சுபனேஸ்வரி(சோபா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சர்வலோகலட்சுமி, பூலோகசிங்கம், சந்தானலட்சுமி, வீரசிங்கம், விஜயலட்சுமி, இலங்கசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம், திருநாவுக்கரசு, யோகதாஸ் மற்றும் வேதநாயகி அம்பாள், கலாவதி, சந்தாசீலி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஜெஸ்மின், சதீஸ், சுவர்ண்ணா, காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாளினி, அஸ்வின், அபி, ஆதி, கவித்தியா ஆகியோரின் பாசமுள்ள அப்பம்மாவும்,
சந்தோஸ், சுபாணி, சோபியன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா சின்னக்குளம் செட்டிகுளம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.