

கிளிநொச்சி பழைய கமம் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளை இராமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:17/01/2023
அன்பின் அப்பாவிற்காய் சில வரிகள்....
இயற்கையின் நியதி பிறப்பெடுத்தால் இறைபதம் தொடுவர்
வாழ் நாளை அர்த்தமாய் வாழ்ந்து அவன் பணி செய்து
கோபுரமாய் திகழ்ந்து தம்பிரான் திருவடி பற்றிய எம்
அன்புத் தெய்வத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள்
ஆண்டு ஒன்று ஆகிவிட்டும் ஆறவில்லை எம்மனமே அப்பா
அன்பின் இலக்கணமாய் அறிவின் உறைவிடமே அப்பா
ஆழமான நேசமுடன் எம்மை அரவணைத்து வந்தீரே
எமை விட்டுச் சென்று ஓராண்டு ஆனதுவோ
விவசாயப் பெருமகனாய் வீறுநடை போட்டீரே பின்
தம்பிரான் திருவடியில் ஆன்மீகப் பணியதற்காய் ஆழமாக உழைத்திட்டீர்
தன்னலமற்ற சேவையாய் உம் பணியை தொடர்ந்தீரே
தம்பிரான் தவப்புதல்வனாய் அவர் திருவடி பற்றீனீரோ
ஐவரை மகவெனப் பெற்றெடுத்து ஆர்பரித்தீரே
அவர்கள் வாழ்வு சிறக்க அரும்பாடுபட்டீரே
மெய் வருத்தம் பாராது மேன்மையுற உழைத்தீர்கள்
மேதினியில் நாம் வாழ நல்வழி சமைத்து சென்றீரே
எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எம் நெஞ்சமதில் நிறைத்திருப்போம் உமை
உங்கள் ஆத்மா தம்பிரான் திருவடியில் சேர்ந்திருக்க
நாம் அனுதினமும் வேண்டுகிறோம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தி பெறுக
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி,
Jegan We are very much sorry to hear the sad news that your brother passed away in Srilanka. Our thoughts and prayers are with your family. Please accept our heartfelt condolences. Let his soul...