

மட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட வீரக்குட்டி தட்சணாமூர்த்தி அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வீரக்குட்டி, இரதிமாது தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சுமதி(ஓய்வுநிலை ஆசிரியை) மற்றும் பாமதி, கலைமதி(இத்தாலி), கோமதி(ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்ற சுபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன்(உளநல உதவி நிலையம்- மட்டக்களப்பு), பிரியதாசன்(சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்- மட்டக்களப்பு), பத்மாநந்தன்(இத்தாலி), ஆயுள்வேத வைத்தியர் சுதர்சன்(J.P- பிறப்பு இறப்பு வைத்திய பதிவாளர்- போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கசிவம், குணலெட்சுமி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, கமலாம்பிகை, சுந்தரமூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணமூர்த்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலாம்பிகை, மற்றும் பாலசுப்ரமணியமூர்த்தி(கொழும்பு), காலஞ்சென்ற பாலச்சந்திரா, மற்றும் நீலாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலலோஜினி, காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சிவநேசன் மற்றும் கலாவதி(லண்டன்), சந்திரோதயம்(அவுஸ்திரேலியா), புஸ்பராணி(கொழும்பு), சந்திரிகா(லண்டன்), நிர்மலலோகன்(கனடா), கோமளாதேவி(ஓய்வுநிலை ஆசிரியை), ஸ்ரீஸ்காந்தா(ஒஸ்ரியா), காலஞ்சென்ற சுரேஸ்காந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்ஷ்னி, லினோஜன், நோஜினி, கார்த்திகா, தர்ஷிகா, நேசப்பிரியன், அனுஷாந்த், நர்த்தனா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
மயூரன், ரம்பா, ஜெயந்தகுமார் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
கணேசமூர்த்தி(ஓய்வுநிலை உள்ளக கணக்காய்வாளர்- இ.போ.ச) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
மோகிஷா, லக்ஷஜன், ஷஸ்வத், சஞ்ஜனா, ஜஸ்விந்த் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-11-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 04.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கல்லடி உப்போடை இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
"கலையகம்",
பழைய கல்முனைவீதி,
கல்லடி உப்போடை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
A wonderful human being always with a smile