10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வசந்தமரினா பவளசிங்கம்
கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை
வயது 49
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் குரய்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தமரினா பவளசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பினும் வாழ்வார்" - (யோவான் - 11:25)
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!
தகவல்:
கணவர், பிள்ளைகள்