Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1962
இறப்பு 11 JAN 2014
அமரர் வசந்தகுமார் பஞ்சலிங்கம்
வயது 51
அமரர் வசந்தகுமார் பஞ்சலிங்கம் 1962 - 2014 Anaipanthy, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தகுமார் பஞ்சலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் கடந்தாலும்
உனது நினைவு நாடி ஈர விழிகளுடன்
உன் வதனம் தேடி தீராத வேதனையை
 மனதில் பூட்டி மாறாத நினைவுகளில்
 நாமும் வாழ்கின்றோம்
எனது மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க
 அவனியில் நீ இல்லை- எனினும்
 அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்... 

உடன்பிறப்பே என் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
 நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
 கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியானாய்!
 இதயங்களெல்லாம் நொறுங்க
 இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!
 நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
 எங்கும் போகவில்லை
நீ எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்..! 

உயிரூட்டி வளர்த்தவரை உயிர்
 உள்ளவரை மறவோம்! அன்பைப்
 பொழிந்து அறிவைத் தந்து
 எம்மை இவ்வுலகில் பெருமையோடு
 வாழ வைத்த எம் அன்பு கணவனே !
அணைக்கின்ற கைகளும்
 அழகிய புன்னகையையும்
 அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?

எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!

உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
அம்மா, மனைவி சகோதரர்கள்....!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices