யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தகோகிலம் இராசரத்தினம் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், தனநாயகம், காலஞ்சென்ற ஸ்ரீகாந்தராசா மற்றும் மேனகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயேந்திரன்(பிரான்ஸ்), வசந்தரூபன்(பிரான்ஸ்), மாவீரன் ராஜ்குமார், இராசகோகிலம்(பிரான்ஸ்), கெளரீஸ்வரி(ஜேர்மனி), சோபனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலினி, செல்வரூபன், சிவாநந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலநாதன் அவர்களின் பாசமிகு அத்தையும்,
கோகிலா, கோபி, கோசல்யா, லக்சி, சுஜீபன், சஜீபன், சோபிதன், ஜானுகா, சிவானா, சகானா, சஞ்சனா, திவிசனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான வில்வரத்தினம், சிவகிரிநாயகி, நவரத்தினம் மற்றும் சந்தானலட்சுமி, திலகவதி, ஜேந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33651763452
- Mobile : +33786111883
- Mobile : +4915753326652
- Mobile : +33605581584