

யாழ். கொக்குவில்கிழக்கு அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், யாழ். கொக்குவில்கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி சிவபாலன் அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொக்குவில்கிழக்கு அம்மன் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஓவசியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஹற்றனைச் சேர்ந்த சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்(அன்னம்) நடராசா, தங்கேஸ்வரி(இரத்தினம்) முத்தையா, பரராசசிங்கம் வேலுப்பிள்ளை, மற்றும் தங்கமணி கந்தப்பிள்ளை, விமலாதேவி நமசிவாயம், சுசிலாதேவி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தடாதகை பிராட்டியார் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.