Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 SEP 1951
மறைவு 15 JUN 2014
அமரர் வசந்தாதேவி தேவராஜா 1951 - 2014 வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வறுத்தளைவிளான் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி தேவராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்து ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…

துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!

அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?

என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute