யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி வாரித்தம்பி பொன்னம்பலம் சுந்தர்ராஜன் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்குமார், சுஜித்திரா, விஜித்குமார், விஜித்திரா, சுஜிவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெளரி, சிறிஸ்கந்தராஜா, விஜிதா, ஜெயபரரஞ்சன், அருள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தானமலர், வசந்தி, துஸ்யந்தி, நித்தியானந்தி, செந்தில்குமரன், வேல்முருகன், சிறிமுருகன், கெளதமன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாஜனா, அனிஷ், அனிக்ஷா, பிரணவன், மதுஷ், அக்ஷனா, அக்ஷியா, ஆகாஷ், பிரகாஷ், வனேசா, அஸ்வின், ஆர்த்தி, சுஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our deeply saddned by the loss that your family have encountered