அமரர் வரதராசா புவனேஸ்வரி
(இந்திராணி)
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்த அன்புத்தாய் இன்று உங்களுடன் இல்லை என்பதை உங்கள் இதயம் இன்னும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் . இந்த வலியிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமாக இருந்தாலும், அவர் உங்களுடன் வாழ்ந்த வாழ்கை, அவர் எப்படி உங்களை வளர்த்து வழிநடத்தினார்கள், எப்படிப்பட்ட பாடங்களைக் கற்று கொடுத்தார்கள் என்றவிடயங்களை மறக்கமுடியாது. இந்த தாய் உங்களோடு வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டுப் பார்த்து அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இழப்பு ஒரு வேகமான காற்று போல் வருகிறது இருப்பினும், இந்த தாய் இப்போது இறைவனின் கரங்களில் ஓய்வெடுக்கிறார் என்பதை அறிந்து ஆறுதல் அடையவேண்டும்
இந்த தாய் உங்கள் கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் உங்கள் முன்னே அவருடைய முகம் எந்நாளும் உயிர்வாழும் என்பதில் ஐயமில்லை இந்த மண்விட்டு மறைந்த இந்த தாய் விண்ணோக்கி சென்றாலும் உங்கள் கண்விட்டு மறையாமல் பலகாலம் இருப்பார்கள். இந்த தாயின் ஆத்ம சாந்திக்காக அவர் அறுகுப் பூசை செய்யும் அந்த விநாயகப் பெருமானை வேண்டிநிற்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute