
யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதலஷ்மி சிவகுரு அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்புத் துணைவியும்,
கீதா, கிரிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயானந்தன், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினசபாபதி, ஜெதீஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், காங்கேசு மற்றும் நாகம்மா(சுமதி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிலாஷ், அஸ்வின், அனோஜன், அகிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.