Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1937
இறப்பு 17 DEC 2019
அமரர் வன்னியசிங்கம் இரத்தினசிங்கம்
ராம்சேது அன்ட் கொம்பனி கொழும்பு யாழ்ப்பாணம் விற்பனைப் பிரதிநிதி
வயது 82
அமரர் வன்னியசிங்கம் இரத்தினசிங்கம் 1937 - 2019 மலேசியா, Malaysia Malaysia
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் இரத்தினசிங்கம் அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் தங்கராசம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வி செ. வன்னியசிங்கம்(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர் இலங்கை வங்கி- யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான தவமணி, இராஜசிங்கம், விஜயசிங்கம், மற்றும் பாலசிங்கம், இ. தேவகிருஷ்ணா(ஓய்வுபெற்ற ஆசிரியை- Bsc யாழ்/மானிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரூபா- சுவீற்றி(நோர்வே), கிருஷாந்(கொழும்பு), நிஷாந்(பிரான்ஸ்), கிருபா(பிரான்ஸ்), சொரூபா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தராஜ்(நோர்வே), குகதாஸ்(பிரான்ஸ்), ரகு(ஜேர்மனி), கயல்விழி(பிரான்ஸ்), புஸ்பராணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா, மிதுலன், வைஸ்ணன், அபிஷாயினி, கர்சன், கர்சிகா, சாமுவேல், டேவிட், ரதிஷசன், நவீன், டிலானி, கயனிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2019 புதன்கிழமை அன்று பி. ப. 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மருமகன், மனைவி