

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வன்னியசிங்கம் சஞ்சிவிராஜா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
படிக்கும் பருவத்தில் பாதகரை அழிக்கவென்று
துடிப்புடன் புறப்பட்ட வீர வேங்கையே
நொடிப்பொழுதில் எம்மை விட்டு எங்கே சென்றாய்?
கொடிய காலன் தான் சதிசெய்தாள் போலும்
வீட்டு உறவுகள் பல நூறு உடன் இருந்தும்
நாட்டு நலன் ஒன்றே பெரிதென நினைத்து
காட்டிலும் மேட்டிலும் களமாடிய கனல் வேங்கையே
பாட்டுடைத் தலைவனாகி பாரினில் பகலவன் ஆனாய்
மருத்துவப் பிரிவிலே மறவர்களிற்கு ஆற்றிய சேவை கண்டு
பெருமிதம் கொண்டு வியந்து நின்ற வேளை
கடுகதியாக களத்தினுள் புகுந்து காவியமானாய்
விருப்பமுடன் வீறு கொண்டு கல்கொடை போராளியானாய்
தானைத் தலைவன் காட்டிய வழியில் மண்ணை மீட்க
சேனைத் தளபதி போல் வீறுகொண்டு வெஞ்சமர் புரிந்தாய்
தேனை ஒத்த உந்தனை மாய்த்தானே அந்தக் காலன்
வானை அடைந்த உன்னை மறக்கமுடியாமல் தவிக்கின்றோம் உன் உறவுகள்!
வீட்டு முகவரி:
160, ஜெயந்தி நகர்,
கிளிநொச்சி.