

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும், தமிழ்நாடு கல்லிடைக்குறிச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளியம்மை இரத்தினசிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை கந்தையா, பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரன்(கண்ணன்), விக்னராஜா(ரஞ்சன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குகப்பிரசாதன், தங்கராசா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபதி அவர்களின் அன்பு மாமியாரும்,
பாரதி, பைரவி, புருஷோத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எஸ்தர், எப்சிபா, சாகித்யன், சபரீசன், மரியமித்ரன் ஆகியோரின் கொள்ளும் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-03-2021 சனிக்கிழமை அன்று மாலை கல்லிடைக்குறிச்சியில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.