யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் துரைராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் வல்லிபுரம் துரைராசா அவர்களின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வு 23-11-2024 சனிக்கிழமை கீரிமலை புனித தீர்த்தக் கரையில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, வீட்டுக் கிருத்திய நிகழ்வு 25-11-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் மு.ப 11:00 மணியளவில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் தங்களை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.110/32,
திருநாவலர் வீதி,
கூமாங்குளம்,
வவுனியா.
The pain of losing you is immeasurable. I know the biggest star in the sky that is shining the most is you. I hope you are living well in the world of the creator. RIP appappa