Clicky

பிறப்பு 24 JUN 1943
இறப்பு 18 SEP 2025
திரு வல்லிபுரம் திருச்செல்வம்
முன்னாள் இ.போ. சபைப் பணியாளர், நாடக நடிகர், கலைச் செயற்பாட்டாளர்
வயது 82
திரு வல்லிபுரம் திருச்செல்வம் 1943 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகிலன் குடும்பம் : முகுந்தன் - அருந்தா, இளவேனில் - சாறா, இலக்கியன் 19 SEP 2025 France

எங்களது நீண்ட கால நண்பர் நல்லையா - வாசுகி குடும்பத்தில் ஒரு துயராய்ந்த செய்தி. பிரான்சில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக எமது அடுத்த தலைமுறை புலம்பெயர்ச் சிறார்களுக்கு தமிழ் கற்கைப் பணியை ஆற்றிவரும் வாசுகி அவர்களது தந்தையார் வல்லிபுரம் திருச்செல்வம் காலமாகிவிட்டார். கண்டங்கள் கடந்த புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில், இத்தகைய துயர் நிகழ்வுகள் உற்றத்தார், உறவினர்க்கு தனித்துவமான மன வலியை அழுத்திச் செல்லும். எதையும் எதிர்கொள்ளல்தானே வாழ்வு! « பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை » - எனும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளுடன் இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார் உறவினர் சுற்றத்தினர் அனைவருக்கும் எமது இரங்கலைத் தெரிவிக்கிறோம். - வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து காலமாகிய திரு வல்லிபுரம் திருச்செல்வம் ஐயாவுக்கு எமது இறுதி வணக்கம்!