யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern Sursee ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராஜாஅவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறவா எங்கள் உயிர்ச் சகோதரனே!
எமது அருமைச் சகோதரனே சின்னண்ணா!
உமைத் தேடி எங்கள் கண்கள் அலைந்ததண்ணா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எமது உடன்பிறப்பே!
இன்று எம்மை
தவிக்கவிட்டு எங்கே நீர் சென்றீர்?
அருமைச் சகோதரனே உம் உறவே உயர்ந்ததென்று இருந்தோம்...
எம் உயிரிலும் நினைவிலும் நீங்கள் ஒன்றாய் கலந்திருந்திருந்தீர்கள்
பாதியிலே நீங்கள் எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்!
புன்னகையோடு காணாமல் போனவரே
கண்ணீரோடு எம்மை தவிக்க விட்டுச்சென்றீரே
வையகத்தில் நீங்கள் வளமோடு வாழ்வீர்கள் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் கனவாக்கி நீங்கள் எங்கே சென்றீர்கள் சின்னண்ணா!
காலங்கள் சென்றாலும் உம் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றோம்
ஊரே உமை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ உம் பிரிவால் துவண்டு கிடக்கும்
உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
நெஞ்சுருக்கும் செய்தியொன்று- நாம்
நொடிப் பொழுதில் அறிந்தோமண்ணா...
இடியென வந்த செய்தி - எம்
இதயத்தை சுட்டதண்ணா...
காலனவன் வென்றானென்று
கண்ணிமைக்கும் பொழுதினிலே
காற்றினிலே கலந்தாயண்ணா
குலவிளக்கு அணைந்ததென்று
ஊற்றெடுக்கும் விழிநீரால்
எம் உதிரங்களே கண்ணீரால் வெதும்புதண்ணா.
நிழல் போன்று எங்கும் தொடர்வீர்
நினைவை தந்து ஏன் சென்றீர்?
கனவாய் தொலைந்தது ஆண்டு ஐந்து
கரையுது இன்னும் விழியிரண்டு
உம்மோடான நினைவுகள்
சுமையாய் கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம்
புவிமீதில் உம் நினைவோடு எந்நாளும்...
ஆண்டு ஐந்து ஆனாலும் அழியவில்லை எம் சோகம்!
ஆண்டுகள் பல ஆனாலும்
மாறாது எம் துயர்
மறையாது உங்கள் நினைவு!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் சின்னண்ணாவே!
உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும்
கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுடன்
மனைவி, பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், உடன்பிறவாச் சகோதர சகோதரிகள்,
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்...