
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பரமசாமி அவர்கள் 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னதங்கம் தம்பதிகளின் மகனும், காலம்சென்ற தம்பிஅப்பா, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமார், தபோநிதி, தயாநிதி, தவநிதி, பவநிதி, சதீஸ்குமார், தர்மநிதி, சபேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா, அம்பலவாணர், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமதி, யோகேஸ்வரன், ரவீந்திரன், பாலச்சந்திரன், ஐங்கரன், வனிதா, தயாபரன், லக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்யா(கிருஷாந்த்), சகானா(தினேஷ்), சாருகன், டனிலா, ஒசான், கோபிகா(நிறோஜன்), ஜோதிகா, சுஜிதா, சுஜீபன், சுபதன், ஜனனி, அபிரா, அபிஷா, அனோஜன், அவினாஷ், அஷ்விகன், கஜீனா, அபினா, ஆஷா, மீரா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.