Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 19 OCT 1948
மறைவு 06 AUG 2023
திரு வல்லிபுரம் நவரத்தினம்
முன்னாள் அகில இலங்கை துவிச்சக்கரவண்டி 2 Times Champion/ நெல்லியடி Central பழைய மாணவர்
வயது 74
திரு வல்லிபுரம் நவரத்தினம் 1948 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். தல்லையப்புலம், துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டு இடதுகரையை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா இலண்டன் Wembleyயை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நவரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் 12, Clifton Avenue Wembley, HA9 6BW அவரது இல்லத்திலும், தர்ப புண்ணியபூசை மு.ப 09:00 மணியளவில் ஆர்சுவே முருகன் கோவிலிலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், முருகதாஸ்(தாஸ்), குகதாஸ்(குகன்)
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.