Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JAN 1946
இறப்பு 10 NOV 2014
அமரர் வல்லிபுரம் மகாலிங்கம்
வயது 68
அமரர் வல்லிபுரம் மகாலிங்கம் 1946 - 2014 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பக்ரைன், மட்டுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் மகாலிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.    

உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து
அறிவைத் தந்து எம்மை
இவ்வுலகில் பெருமையோடு
வாழ வைத்த எம் அன்புத் தந்தையே!

அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?

சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நீங்கள் மறைந்து 12 ஆண்டுகள்
12 ஆயிரம் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!

தகவல்: குடும்பத்தினர்