

யாழ். தெல்லிப்பழை கிளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குழந்தைவேலு அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன்(ஜேர்மனி), சிவராணி(நோர்வே), சுதாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தா(ஜேர்மனி), கருணாகரன்(நோர்வே), கிருஸ்ணதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாக்கியம், காலஞ்சென்றவர்களான பசுபதி, வயிரமுத்து, சோமசுந்தரம், நாகராஜா, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிரஞ்சினா, நாகநாதன், வன்னித்தம்பி, அன்னலட்சுமி, சற்குணதேவி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாசினி, தர்சனி, ஆனந்தராஜன், ஆனந்தி, சத்தியசீலன், ஆதிராஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வாகினி, சுபாங்கன், கீர்த்தனா, சரண்யா, ராகுல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2019 புதன்கிழமை அன்று கிளானையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.