Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1932
இறப்பு 01 APR 2019
அமரர் வல்லிபுரம் கந்தசாமி
முன்னாள் அதிபர்- பலாலி ஆசிரியர் கலாசாலை, முன்னாள் யுனெஸ்கோ கணித, விஞ்ஞானக் கல்வி ஆலோசகர்- பூட்டான், முன்னாள் பௌதீகவியல், கணித ஆசிரியர்- சயன்ஸ் சென்ரர், முன்னாள் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்- கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி, அறங்காவலர் அவைத் தலைவர்- கரவை வெல்லனிற் பிள்ளையார் கோவில்
வயது 87
அமரர் வல்லிபுரம் கந்தசாமி 1932 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஐந்தாம் ஆண்டு நினைவில்
அமரர் கந்தசாமி வல்லிபுரம்
01-04-2024(திதி 05-04-2024)

பதினோராம் ஆண்டு நினைவில்
அமரர் பராசக்தி கந்தசாமி
22-02-2024(திதி 20-02-2024)

இரு கண்ணை இழந்தது போல் இருக்கிறது வாழ்வு!
இருக்கும் வரை தெரிந்ததில்லை இல் வாழ்வு!
தந்தை தாய் இருவரும் இல்லாத போது
வெந்து தணிகிறது பிள்ளைகள் வீடு!
பூவுலகில் நீங்கள் இல்லாத வெறுமை
வறுமையை விட கொடிய வறுமை
ஆனாலும் கற்றவர் சபைகளிலும்
உற்றவர் உறவுகள் உரிமையிலும்
முன்னுக்கு இருக்க வைத்த பெருமை
இதைவிட ஏது வேண்டும் உரிமை!
இன்றும் நினைவேந்திக் கொள்கிறோம்
இறைவனை வேண்டி பல வரம் கேட்டுக் கொள்கிறோம்!
ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 02 Apr, 2019