4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 AUG 1945
மறைவு 21 MAY 2018
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி (வெள்ளையர்)
வயது 72
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி 1945 - 2018 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் கனகசபாபதி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 06-06-2022

ஆண்டு நான்கு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை

ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்