யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிப்பிள்ளை இராசையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
இராசகுலதேவி(இராசாத்தி), ஜெகராஜா(துரை), இராஜேஸ்வரன்(ஈசன்), கருணாதேவி, தனம்(இலக்சுமி), கோகிலாதேவி, ஞானேஸ்வரன்(ஞானம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மகுமார், ஞானேஸ்வரி, நளினி, நீதி, முரளி, இரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. றொகான் தர்மகுமார், றொகாணா, அரவிந்தன், அஜந்தா, நிதர்சன், சுதர்சன், அருண், மயூரி, பிருந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஞ்சனா, அர்ஜுன், பிரியா, அபிநயா, அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
வள்ளிப்பிள்ளை இராசையா என்றால்- இல்லாததொன்றில்லை என்பது இவரைக் கண்டறிந்தோர் கருத்துக்கமைய, அம்மா! என்று அழைக்காத உயிர் ஏது? அம்மா இல்லாத உயிர் ஒன்று உலகில் உண்டா? இல்லை.
அம்மா! நீங்கள் உருவத்தில் சிறிது. ஆனால் நீங்கள் ஒரு பரந்த ஆலமரம். உங்கள் நிழலில் வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில் அநேகர் இன்றில்லை என்பதுவும் உண்மை.
அம்மா! நீங்கள் விட்ட விழுதுகள் பல. ஆண்டவன் அருளில் பெற்றெடுத்த செல்வங்கள் ஏழு. காலம் எங்கள் ஏழு பேரையும் கடல் கடக்க வைத்தது, உங்களுடன் சேர்த்து. நீங்கள் தேடிய சொத்துக்கள் - பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகள் வேறு எதையும் நீங்கள் தேடவில்லை.
உங்களைத் தேடிவந்த அசையாப் பரம்பரைச் சொத்துக்கள் அனைத்தையும் தாரை வார்த்தீர்கள் தருமத்திற்கு. பதிலாகக் கனடா மண் உங்களிற்குப் பலவிதமான உதவிகளையும் வழங்கியது. நீங்கள் அறிந்தும், அறியாமல் இருக்கும் காலங்களிலும்.
“கனடா மண்ணிற்கும் உங்கள் சார்பாகப் பிள்ளைகளின் நன்றி”
"கைகளில் அடக்கிவிட்டால் உறைந்துவிடும் விரித்து விட்டால் பரந்துவிடும்"- இதுவே தருமத்தின் உண்மை. தருமம் தலைகாக்கும் என்பதை எங்களிற்குப் பல வழிகளிலும் உணராமல் உணர்த்தினீர்கள். உங்களால் சொல்ல முடியவில்லை - செயலில்காடி விட்டீர்கள்.
"பொன்னுடையரேனும், புகழுடையரேனும் எதுவுமே இல்லாதவரேனும்" இறைவன் திருப்பாதங்களில் சமம் என்பதைத் தெளிய வைத்தீர்கள்.
இலக்கணம் என்றால் என்னவென்றே தெரியாமல் எதுகை மோனையுடன் பாடுவீர்கள். பாட்டினால் பலரையும் பரவசப்படுத்தினீர்கள். பார்த்தவர்கள் அனைவரையும் தம்பி, பிள்ளை என்பீர்கள். உங்கள் பார்வையில் தென்படுவர்களை புன் சிரிப்பினால் கவர்ந்தீர்கள்.
அம்மா! நீங்கள் எங்கள் மனங்களில் விதைத்த நல்விதைகள்தான் இவை எல்லாம். அம்மா! இன்று எல்லை கடந்து போய்விட்டீர்கள். பரந்த உலகில் வாயு வேகத்தில் வானளாவைப் பறந்து விட்டீர்கள். எங்களால் உங்களைத் தேடமுடியாத தொலைதூரம் போய்விட்டீர்கள்.
அம்மா! நாங்கள் உங்களைத் தொலைத்து விட்டோம் உங்கள் 95 வயதினில். “காலம் யாருக்காகவும் காத்திருக்காது” என்பதை நன்றாகவே அறிய வைத்தீர்கள். ஆனால் எங்கள் மனங்களில் நீங்கள் தூவிய விதைகள் யாவும் முளை விட்டுப் பூத்துக், காய்த்துக், கனியாகும் போதெல்லாம் நீங்கள் என்றும் எங்கள் மனங்களில் வாடா மலராகவே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.
ஆண்டவன் திருக்கரங்களில் நீங்கள் என்றும் அனையாத திருவிளக்காகத் தவழ்ந்து கொண்டிருக்க இறை அருள் வேண்டி நிற்கும் உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.