யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் நடராஜா அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(கமலம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தன், குலசேகரம் மற்றும் சோமசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயகுமார், இரத்தினகுமார், கமலநாதன், கமலகுமாரி, குசலகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி, விஜயரஞ்சினி, காலஞ்சென்ற சியாமளா, சிவகுமார், உதயணன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷ்யந், அரவிந், கீர்த்திகா, தஷாந்தி, லிஷாந்தி, மேனன், பிரியந், நான்சி, ரூபா, விமல், கிசோர், கியோன், தாரணி, கர்ணன், வர்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிலா, காளி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.