 
                     
        யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம், அராலி மேற்கு வட்டுகோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பையா(விதனையார்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சுதந்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, கண்மணி, அராலி மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, ஞானம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி(சந்திரா), சர்வேஸ்வரி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரராஜா(சின்னதம்பி), காலஞ்சென்ற தவமணி(தவம்), சறோஜினி(இளங்குரு), ராணி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
பாஸ்கரன்(ஆசிரியர் கிளி/ஊற்றும்புலம் அ.த.க KN/Ootrupullam G.T.M.S, இலங்கை), புஸ்பலதா(லதா- பிரித்தானியா), சந்திரகலா(சுதா- பிரித்தானியா), நித்தியகலா(விஜி, ஆசிரியை- கிளிநொச்சி/ பன்னங்கண்டி அ.த.க பாடசாலை, இலங்கை), பிரான்ஸைச் சேர்ந்த பிரமிளா(சசி), பிரதீபா(தீபா), சிறிகோபிநாத்(கோபி), பிரகலா(பிரபா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
அன்பரசி(ஆசிரியர் கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலயம், KN/kilinochchi maha viththiyaalaym,இலங்கை), இராஜேந்திரமூர்த்தி(நேசன்- பிரித்தானியா), காலஞ்சென்ற நிரஞ்சன்(பிரித்தானியா), யசோதரன்(இலங்கை), பிரான்ஸைச் சேர்ந்த இரட்ணசீலன்(சீலன்), மனோரஞ்சித்(ரஞ்சித்), பஞ்சகரன் மற்றும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த தாரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு பெறாமகனும்,
நெதர்லாந்தைச் சேர்ந்த லோகநாயகி, யசந்தநாயகி, ரஞ்சிதநாயகி மற்றும் கனடாவை சேர்ந்த சங்கரகணேசன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
இலங்கையைச் சேர்ந்த தாரந்தன், யது, தாருசன் ஆகியோரின் அப்பப்பாவும்,
இங்கிலாந்தைச் சேர்ந்த திருமதி செனசா அஜய், செனசியா, குமரன், நிதர்ஷன், இலங்கையைச் சேர்ந்த அபி, ஆதி, கனி, சீமான், பிரான்ஸைச் சேர்ந்த நிலா, கவின், ரோஷன், அதிசா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் பூதவுடலை பார்வையிட வருபவர்களுக்கான அனுமதி பத்திரத்தை பெற பிரான்ஸ் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
 
                    