Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைத்திலிங்கம் இரத்தினசிங்கம்
(கொழும்பில் தொழில் புரிந்தவர்)
மறைவு - 16 DEC 2012
அமரர் வைத்திலிங்கம் இரத்தினசிங்கம் 2012 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் இரத்தினசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:27/12/2022.

ஆண்டு பத்து ஆனதப்பா
 ஆறவில்லை எங்கள் மனம்
 ஆயிரம் உறவுகள் அரவணைக்க
 இருந்தாலும் அப்பா என்ற
அன்பிற்கு ஈடாகுமா?

 பாசமிகு தந்தையே
 பார் புகழ் போற்ற பக்குவமாய்
 எமை வளர்த்த பண்பாளனே
 நேசத்தின் இருப்பிடமே எம்
 நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
 எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!

நீங்கள் எமக்கு ஊட்டியவைகள்
 எல்லாம் நித்தம் நினைவில் வந்து
 வந்து எம்மை நெறிப்படுத்தி
 செல்கின்றன நிதானமுடன்
அவ்வழியே பயணிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute