

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் வேதலிங்கம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், வைத்திலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
மதுரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிசேகர்(சுவிஸ்), சதீஸ்வரன்(கனடா), சுரேஸ்வரன்(சுவிஸ்), முகுந்தன்(குடத்தனை), முகுந்தினி(கனடா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலதி(சுவிஸ்), கமலசோதி(கனடா), ஜெயலதா(சுவிஸ்), லஷ்சி(குடத்தனை), செல்வரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவிஸில் வசிக்கும் நிவேதிதா, நிவேதிதன் விகாஷ், கனடாவில் வசிக்கும் சர்வின், சன்சிகா ,சஸ்வின், சுவிஸில் வசிக்கும் சண்யூ, சாருஜன், இலங்கையில் வசிக்கும் சானுகா சஞ்சனா, கனடாவில் வசிக்கும் சபினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சின்னத்தங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கொங்காதேவி, காமினிதேவி ஆகியோரின் அன்பு மாமாவும்,
லோகேஸ், கலையரசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனுஸ், றதீஸ், வர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப.11:00 மணியளவில் குடத்தனை வடக்கு குடத்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.