யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்தியலிங்கம் செல்லத்துரை அவர்களின் 100ம் ஆண்டு பிறந்தநாளும், 25ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
திதி: 05-01-2024
100வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் உங்கள் நினைவில் உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
சகோதர, சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அய்யா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா.....