Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAY 1983
இறப்பு 30 MAY 2026
திரு வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி)
Former Storekeeper at the Mallavi Sub Office of the World Food Programme(WFP)
வயது 43
திரு வைத்திலிங்கம் புவனேஸ்வரன் 1983 - 2026 மல்லாவி யோகபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ் நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் புவனேஸ்வரன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்(தம்பு) சிவபாக்கியம் தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம்(பரா), இராசலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியர் அனிஞ்சியன்குளம் அ,த,க பாடசாலை) தம்பதியரின் மருமகனும்,

அகல்யா அவர்களின் கணவரும்,

நிந்துஜன், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாநிதி(பாபு கனடா), சந்திரபாலன்(மாவீரர் கேணல் கோபித்), நளாயினி (ஆசிரியை யாழ் ஜோன் பொஸ்கோ), கோகுலதாஸ் (கோபு- முன்னாள் ஆசிரியர் துணுக்காய் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஶ்ரீசுரேகா(கனடா), சசிகரன்(அதிபர் மு/யோகபுரம் ம.வித்தியாலயம்), நிஷாந்தினி(முன்னாள் விவசாய போதனாசிரியர்), கோபுசங்கர், ஹரிராம், வைஸ்ணா ஆகியோரின் மைத்துனரும்,

அனன்யா, ஆர்யா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

புதியவன், புகழ்நிலா, சாதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கருணாநிதி(பாபு ) - சகோதரன்
கோகுலதாஸ் (கோபு) - சகோதரன்
சசிகரன் - மைத்துனர்

Photos

Notices