யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.119/3 முன் ஒழுங்கை, பலாலி வீதி திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா மகேந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வயித்திலிங்கம்(உரிமையாளர் - கண்ணன் லொட்ஜ், பரமேஸ்வரா சந்தி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தி(லண்டன்), சதீஸ்குமார்(கனடா), லோகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவிகரன்(லண்டன்), சசிமாலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆர்த்திகா, ஆகிஷ்(லண்டன்), அக்சரா, பிரித்திஷா, ஈழவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான சத்தியரூபதி- சச்சிதானந்தம் மற்றும் தர்மாம்பிகை- திருச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.119/3 முன் ஒழுங்கை,
பலாலி வீதி,
திருநெல்வேலி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details