Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1941
இறப்பு 13 JAN 2020
அமரர் வைத்திலிங்கம் மாணிக்கவாசகர்
வயது 78
அமரர் வைத்திலிங்கம் மாணிக்கவாசகர் 1941 - 2020 அளவெட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மாணிக்கவாசகர் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மகாபரன்(ஐக்கிய அமெரிக்கா), வித்தியாறூபி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேகலா(செல்வி), சாயிமாதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலமணி, நேசமணி மற்றும் ராசமணி, சரவணபவன், விஜயமணி, சாம்பவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கதிர்காமநாதன், சிவசுந்தரம், மனோகரன், ராகினி, வத்சலா மற்றும் காசிநாதன், பத்மாதேவி, ஜெயதேவி, ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், விமலாதேவி கல்யாண கிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிருத்தீஷ், கபினாஷ், அபினாஷ், நவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்