யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.
எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை எமக்களித்து
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆலமரமாய் நீங்கள் எங்களை அரவணைத்தீர்கள்
விழுதுகளாய் நாம் இருந்தோம் அம்மா!
நாட்கள் 31 கடந்தாலும்
உங்களின் உள்ளத்து நினைவலைகள்
இன்னும் ஓயவில்லை அம்மா!
ஆசைகள் காட்டியா எங்களை
வளர்த்தீர்கள் அம்மா
இல்லையே பாசத்தையே
காட்டியெல்லோ எங்களை
வளர்த்தீர்கள் அம்மா!
இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே எமக்கு தாயாக வேண்டும் அம்மா
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து
மாறா அன்பில் எமை ஆக்கி - இன்று
விண்ணில் தெய்வமென உயர்ந்த விந்தை மிகு எம் தாய்...
வையத்துள் தெய்வமானார்
கூடும் சதுர்த்தியில் எம் குலவிளக்கு - இறைதாளைச்
சேர்ந்தார் நினைவால் செயல் இழந்தோம் - ஆம்! மனத்துள்
வாழும் தாய் எங்கள் வரம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.