யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும், தற்போது வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் முருகன் அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமன் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திருவருட்செல்வன், காலஞ்சென்ற திருவருட்செல்வி, திருவருட்சக்தி, திருவருட்நாதன்(நியூசிலாந்து), ரஜனிக்குமார்(கனடா), சந்திராகாந்தி, துஷியந்தி(லண்டன்), பிரியதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைபிள்ளை, கமலம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேந்திரன், பேரின்பநாயகி, மதிவதனி, மதனேஸ்ரதன், கேசவன், எமல்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்ஷன்- சந்திரிக்கா, கிதுர்ஷனன், டிவாஷனன், சாருகாஷனன், தருண், கவிகாஷ், றணுக்ஷன், விகேஸ், லிஷாந்தன், லிஷாலினி, அஸ்வினி, அவினாஸ், சுருதிகா, இசை ஆகியோரின் அன்புப் பேரனும்,
வர்சிகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்ட மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                    
        
            
                    
                    
தம்பி நாதன் குடும்பத்தாரின் இத்துயரில் கலந்து கொள்வதுடன் நாதன் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.