Clicky

பிறப்பு 11 MAY 1949
இறப்பு 13 MAR 2019
அமரர் வைரமுத்து வரதகுமார்
வயது 69
அமரர் வைரமுத்து வரதகுமார் 1949 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 22 MAR 2019 United Kingdom

இலண்டன் தமிழர் தகவல் மையத்தின் இயக்குனர் வை. வரதகுமார் அவர்களின் மறைவு ஆழ்ந்த அனுதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது. கிளிபீப்பிள் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவராக ஆரம்பம் முதல் இன்றுவரை செயல்பட்ட ஒருவரின் இழப்பினால் நாம் துயருற்று இருக்கின்றோம். 2011ம் ஆண்டு மே மாதம் கிளிநொச்சி மக்கள் தமக்கென ஒரு மாவட்டம் சார்ந்த மக்கள் அமைப்பு உருவாக்கப்படவேண்டுமென ஆவல்கொண்டபோது வரதன் அண்ணா தாமாக முன்வந்து ஊக்கம் தந்து தனது அலுவலகம் இயங்கிய துளசி கட்டிடத்தில் ஒரு அறைய ஒதுங்கியிருந்தார். எமது முதலாவது ஒன்றுகூடல் மே 28ம் திகதி கூடியபோது 8 பேர் மாத்திரமே சமூகம் தந்திருந்தனர். அன்றுதான் முதன்முதலில் வரதன் அண்ணா உடனான சந்திப்பும் நிகழ்ந்தது. அன்று அவர் வழங்கிய ஆலோசனைகளும் ஆதரவான வார்த்தைகளும் எமக்கு மிகவும் பலமான நம்பிக்கையை கொடுத்தது. கிளி மக்கள் அமைப்பு இன்றுவரை எந்த நிகழ்வு நிகழ்த்தினாலும் வரதன் அண்ணாவின் வாழ்த்தும் பங்களிப்பும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஒரு வேலைத்திட்டத்தில் எப்படி மற்றவர்களை இணைத்து வேலை செய்யலாம் என்றும் அதன்மூலம் எவ்வாறு எல்லோரும் இலக்குகளை அடையலாம் என்றும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சிந்தனைகளை சுமந்தவண்ணமே இருப்பார். இவரது தூரநோக்கு சிந்தனைகளை எண்ணி நாம் வியப்பதுண்டு. அண்மையில் கிளிமக்கள் அமைப்பு நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு மங்கள விளக்கினை ஏற்றியும் சிறப்பித்தமை எமக்கு பெருமையளிக்கின்றது. இந்த 8 வருடங்களில் வரதன் அண்ணா இல்லாது எமது நிகழ்வுகள் நடந்ததில்லை. இந்த நிகழ்வில் அன்று எம்முடன் பேசும்போது எதிர்கால திட்டம் தொடர்பாக சந்தித்து பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மார்ச்மாத கடைசியில் சந்திப்பதாக சொல்லியிருந்தோம் ஆனால் இன்று அவர் இல்லை. நம்பிக்கையோடு செயல்படுவதுதான் வாழ்க்கையின் அடிநாதம் என வாழ்ந்து காட்டியவர். எமக்கு மட்டுமல்ல பல சமூக அமைப்புகளுக்கும் அடித்தளமாக இயங்கியவர். புலம்பெயர் தமிழர் செயல்பாடுகளில் தனது பங்களிப்பை மிகவும் காத்திரமாக பதிவு செய்தவர். சமூக அரசியல் கலாச்சார கட்டமைப்புக்களை பிரித்தானியாவில் கட்டியெழுப்புவதில் இவர் வழங்கிய பங்களிப்புக்கு எமது வரலாறில் ஒரு இடம் என்றும் இருக்கும். தான் வாழும்போது எம் சமூகம் சார்ந்து வாழ்ந்த இந்த உயர்ந்த மனிதனுக்கு கிளி மக்கள் அமைப்பு தமது அஞ்சலிகளை செலுத்துகின்றது.