Clicky

பிறப்பு 11 MAY 1949
இறப்பு 13 MAR 2019
அமரர் வைரமுத்து வரதகுமார்
வயது 69
அமரர் வைரமுத்து வரதகுமார் 1949 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 MAR 2019 United Kingdom

வரதர் , நீங்கள் காலமாகிவிட்டதாக ரி ஐ சி யின் மின்னஞ்சல் கிடைத்ததும் அதிர்ந்து போனேன். நமது இனத்துக்கு நேர்ந்த இந்த இழப்பை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகிறோமோ தெரியவில்லை. தனிப்பட்ட ஒருவரை இழந்து விட்டதாக நான் கருதவில்லை. நம் இனத்துக்கு ஒப்பற்ற பணி புரியும் ஒரு பென்னம் பெரிய இயங்கு தளம் தங்கள் பிரிவால் அனாதையாக்கப் பட்டு விட்டதாக உணர்கிறேன். தங்களை 1980 களின் முற்பகுதியில் லண்டன் கிளாப்ஹம் ரி ஐ சி அலுவலகத்தில் முதல் தடவையாகச் சந்தித்தேன். கந்தசாமி ஐயா, பத்திநாதர் அடிகளார், பேணாட் அடிகளார் ஆகியோருடன் கூடி , ரி ஐ சி என்ற மானுட நேய அமைப்பை , களைப்போ சலிப்போ இல்லாமல் அர்ப்பணிப்போடு உருவாக்கி உழைத்துக் கொண்டிருந்த வரதகுமார் என்ற அந்த இளைஞருடன் நீண்ட நட்புப் பேணும் பேறு எனக்குக் கிடைத்தது. சில ஆண்டுகளில் ரி ஐ சி அமைப்பைத் தனியனாகத் தங்கள் தோள்களில் சுமந்து , ஒத்த இலட்சியத்துடன் இயங்கும் தோழர்களையும் இணைத்து , இன்றைய அதன் நிலைக்கு உயர்த்தியமை தங்கள் சாதனையும் நம் வரதர் , நீங்கள் காலமாகிவிட்டதாக ரி ஐ சி யின் மின்னஞ்சல் கிடைத்ததும் அதிர்ந்து போனேன். நமது இனத்துக்கு நேர்ந்த இந்த இழப்பை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகிறோமோ தெரியவில்லை. தனிப்பட்ட ஒருவரை இழந்து விட்டதாக நான் கருதவில்லை. நம் இனத்துக்கு ஒப்பற்ற பணி புரியும் ஒரு பென்னம் பெரிய இயங்கு தளம் தங்கள் பிரிவால் அனாதையாக்கப் பட்டு விட்டதாக உணர்கிறேன். தங்களை 1980 களின் முற்பகுதியில் லண்டன் கிளாப்ஹம் ரி ஐ சி அலுவலகத்தில் முதல் தடவையாகச் சந்தித்தேன். கந்தசாமி ஐயா, பத்திநாதர் அடிகளார், பேணாட் அடிகளார் ஆகியோருடன் கூடி , ரி ஐ சி என்ற மானுட நேய அமைப்பை , களைப்போ சலிப்போ இல்லாமல் அர்ப்பணிப்போடு உருவாக்கி உழைத்துக் கொண்டிருந்த வரதகுமார் என்ற அந்த இளைஞருடன் நீண்ட நட்புப் பேணும் பேறு எனக்குக் கிடைத்தது. சில ஆண்டுகளில் ரி ஐ சி அமைப்பைத் தனியனாகத் தங்கள் தோள்களில் சுமந்து , ஒத்த இலட்சியத்துடன் இயங்கும் தோழர்களையும் இணைத்து , இன்றைய அதன் நிலைக்கு உயர்த்தியமை தங்கள் சாதனையும் நம் இனத்துக்கான தங்கள் ஒப்படையும் ஆகும். அதற்காக நம் தமிழ் இனம் தங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறது. தங்கள் குடும்பத்தாருக்கும் ரி ஐ சி பணிமனையினர்க்கும் துயர் பகிர் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.