

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ராட்டிங்கனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சிவலிங்கநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என அழைத்த அன்பு முகம்
தான் மறைந்து
பத்தாண்டு காலங்கள்
பறந்துவிட்டதானாலும்
அன்றெமக்கு சொத்தாக நீங்கள் இருந்தீர்கள்
சுமைதாங்கியாயிருந்தாய்
தூக்கி வளர்த்து எம் துயரங்கள்
போக்கி நின்றாய்
எம் சுகமே உனதென்று
இதயத்தில் பூட்டி வைத்தாய்
பிள்ளைகளின் திருமணங்கள்
பார்த்து மகிழ்ந்திருந்தாய்
பேரப்பிள்ளைகளை உங்களுக்காய்
நாம் பெற்று பரிசளித்து
பெருமகிழ்ச்சி கொண்டிருந்தோம்
அன்று
காலனவன் உந்தனையே
கவர்ந்துசென்ற காரணத்தால்
அம்மாவுடன் சேர்ந்து
அரும்புதல்வர் நாங்களும்
மருமக்கள் பேரர்களும்
உற்றமும் சுற்றமும் உடனிருந்து
வழியனுப்பி உன் பூதவுடல் தன்னை
வழியனுப்பி வாடிநின்றோம்
காலங்கள் பத்தோடிக் கழிந்துவிட்டதானாலும்
எம் நெஞ்சத்தில் பூட்டிவைத்து
நின்மதியைக்காணுகிறோம்
என்றென்றும் உன் நினைவாக வாடிநிற்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார்கள், உறவினர்கள்
ஆத்மா சாந்திபெற அனுதினமும் பூசிப்போம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!