![](https://cdn.lankasririp.com/memorial/notice/207096/1ee993e0-ddbd-4ed7-aede-a56961525125/22-62536033a3946.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/207096/bd015fb8-56f8-40d6-8608-7db6318f45c9/21-609bb9db2c8a1-md.webp)
யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சிவஞானசுந்தரம் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(இளைப்பாறிய உப அதிபர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கீதாஞ்சலி(கொழும்பு), மைதிலி(கனடா), அமுதா(லண்டன்), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோரஞ்சன்(கொழும்பு), நவநீதன்(கனடா), நிமலன்(லண்டன்),பிரியஸ்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராதாகிருஷ்ணன், பராசக்தி, சரவணபவன், சிற்சபேசன், விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற வீரபத்திரபிள்ளை, பத்மாசனி(கனடா) ஆகியோரின் அனபுச் சகோதரரும், இரங்கநாதன், சகுந்தலாதேவி, யோகநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திலகநாதன், சாரதாதேவி, சிவநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருத்திகா, அத்மிகா, ஆதவன், சேயோன், சேந்தன், உமையா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest condolences to his family May his soul rest in peace