35ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 JUN 1904
இறப்பு 04 AUG 1987
அமரர் வைரமுத்து நல்லதம்பி
(உரிமையாளர் -Jaffna hotel, கொழும்பு கதிரேசன் வீதி)
வயது 83
அமரர் வைரமுத்து நல்லதம்பி 1904 - 1987 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து நல்லதம்பி அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு எனும் பாசறையில்
அணையாத ஒளிவிளக்காய்
 மங்காது ஒளிவீசும் மாசற்ற
 சந்திரனே உங்களன்பு இதயமதில்
 நாமிணைந்து நிற்கையிலே
பொறுக்காத காலனவன் - உங்களை
 பறித்தெடுத்து சென்றதேனோ!

கட்டிய மனைவிக்கும், காத்தெடுத்த
 பிள்ளைகட்கும் கதையேதும்
 சொல்லாமல் கதியிலே சென்றதேனோ?

கல்லறையில் தானுறங்க - எம்மை
 கண்ணீரில் கரையவிட்டு
 தனிமையில் சென்றீரோ?

பாரினிலே எம்வேதனைக்கு
 பரிசாக ஒருமுறை ஒரேயொருமுறை
 மீண்டும் மலராதா உங்கள் முகம்
 அப்பா என்றழைக்க ஆதங்கமாய்
 இருக்கிறதே ஏன்
எமக்கென்று யாருண்டு?

மறு ஜென்மம் உண்மையெனில்
 மன்றாடிக் கேட்கின்றோம் - உங்கள்
அன்புப்பிள்ளைகளாய் பிறப்பெடுக்க!

தகவல்: கமலேந்திரன்