யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து கணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த உங்கள் நன் நடையெங்கே
நிதர்சனமான உங்கள் பண்பெங்கே
அன்பு கொண்ட உங்கள் உள்ளமெங்கே
என்றென்றும் உள்ள இளமைத் தோற்றமெங்கே
இத்தனை நினைவுகளையும் கனவாக்கி போனதெங்கே
அகவை ஒன்றகினும் உங்கள் நினைவு மறையவில்லை
நீங்கள் இல்லாத இடைவெளியையாரலும் நிரப்பமுடியவில்லை
மறைவு தந்த வலியின் கொடுமையினை தாங்க முடியவில்லை
மீண்டும்வரும் உங்கள் வரவையெண்ணி துடிக்கின்றோம்.
கள்ளமற்ற உங்கள் சிரிப்பினாலும்
கபடமற்ற இரக்கமுள்ள இதயத்தினாலும்
ஈகை செய்யும் உங்கள் குணத்தினாலும்
கொள்ளை கொண்ட எல்லோர் நெஞ்சங்களின்
நினைவுகளை கனவாக்கி பிரிந்து சென்றதேனே
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ இம்மாநிலத்தே