யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வயிரமுத்து திருநாவுக்கரசு அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
முத்துப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
விநாசித்தம்பி பூரணம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான திலகவதி, திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகநாதன், கோகுலதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகுந்தலா, காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் ரஜனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரியதர்சினி, கஜானி, பிறேமினி, நிதர்சன், ஜெலானி, திரிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரியானா, விஷாந், அமிலியா, ஆர்சினி ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today, you are not here with us but we will always remember you as a winner, who lived like a King all his life…. May your soul Rest in Peace