யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சங்கானை கிழக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து செந்திநாதன் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
தபேந்திரன்(கனடா), நந்தினி(பிரான்ஸ்), நரேந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜயேந்திரன், சுரேந்திரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானா(கனடா), காலஞ்சென்ற மகேந்திரன்(பிரான்ஸ்), மாலா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பழனிநாதன், நவமணி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
புவனேந்திரன், சர்வேந்திரன், தர்மேந்திரன், றமணேந்திரன், குமரேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிமாஷா, திவ்யா, அனோஷன், நிர்ஷா, ப்ரியா, புருஷோத், தட்ஷா, மதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஜய், ஆதவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் சங்கானை 1ம் ஒழுங்கையிலுள்ள “திருவேரகம்” அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details