
யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும், ஆவரங்கால் சங்கணாவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து நவரத்தினம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி(இரத்தினக்கா) , ரதிராணி(ராணி), சின்னத்தங்கச்சி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம்(சின்னராசா), குகபாலச்சந்திரன்( பவா) ஆகியோரின் மைத்துனரும்.
செல்வேந்திராசா(ராசன் வண்டையா), குலா, கலா, ராஜி, ரகு, கண்ணன், சுரேஸ், தாமினி, கிருஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
சுமணா, நதீஷ், கௌசி, பாமினி, சுபாஷ், இந்துஜா, லக்ஷன், மிதுலன், வேணுஜா, சன்ஜுகா, வஜு, சகி, ஹென்சிஹா, பர்வின், பவிஷன், கனுஷன், கவின், நிகானிஆகியோரின் பேரனும்,
இந்துஜன், தேனுஜா, ஆகேஷ், ஆகாஷ், மகிஷா, நிகிஷா, பவிசனா, தர்சிகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-12-2020 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.