யாழ். பத்தனை கொண்டகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வைராத்தாள் கந்தையா 10-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா தேவர், முத்துராக்கு தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம் தேவர்(சாமிமலை கொழும்பு தோட்டம்), ராமாயி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா தேவர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கவேல் தேவர் அவர்களின் சகோதரியும்,
முத்துலிங்கம் (M.K Supplies, Colombo-11), கணேஷரூபன், குன்றகுமரன், சுந்தரம்பாள், சுசிலாதேவி ஆகியோரின் அருமை தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, மதுவன் தேவர் மற்றும் பரமசிவம் தேவர், காளியம்மாள், பத்மாதேவி ஆகியோரின் அன்பு மதனியும்,
ராமகிருஷ்ணன், தங்கராஜ், கீத்தா, கெளரி, செல்வி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுமதி, சுமங்கலி, சதீஸ்குமார், உஷாந்தினி, சஜன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கிரிதரன், அபிஷேக், ஐஸ்வர்யா, வினித் ஆகியோரின் அன்பு அப்பத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2019 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வத்தளை கெரவலப்பிட்டி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.